தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பகுதியில் நூறு இடங்களில் தெருமுனை பிரச்சார கூட்ட நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் சூலூர் சந்தைப்பேட்டை, கண்ணம்பாளையம், பாப்பம்பட்டி பிரிவில் பாரதிபுரம், கதிரி மில்ஸ் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தலைமை கழக பேச்சாளர் பொள்ளாச்சி மைக் வெள்ளிங்கிரி கலந்து கொண்டு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் இரு ஆண்டுகால ஆட்சி சிறப்பை பற்றி கூடியிருந்த பொது மக்களிடையே எடுத்துரைத்து சிறப்பு உரையாற்றினார்.. நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பட்டணம் ரகு (எ) துரைராஜ்,மாவட்ட கழக துணை செயலாளர் பி.கே. சாமிநாதன், மாவட்ட துணை அமைப்பாளர் இருகூர் உதய பூபதி, பேரூர் கழக செயலாளர்கள் கண்ணம்பாளையம் விஸ்வநாதன், பள்ளபாளையம் கபிலன், சூலூர் கௌதமன், சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வி.அன்பரசு, சூலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் த.மன்னவன் கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா ராஜகோபால், துணைத் தலைவர் கே.என். சண்முகம், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் சோலை கணேஷ், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ். செல்வராஜ், கண்ணம்பாளையம் நகரக் கழக துணைச் செயலாளர் பசுபதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பத்மநாபன், முருகன், பசுமை விஜயகுமார், கலங்கல் ஊராட்சி கழக செயலாளர் களங்கல் சிவக்குமார் , கழக நிர்வாகி ராஜகோபால் மற்றும் திரளான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment