டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு
டாஸ்மாக் கடைகளுக்கு புதிய உத்தரவு மூலம் குடிமகன்கள் மகிழ்ச்சி விற்பனையாளர் கவலை. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ 10 கூடுதலாக வசூலிப்பதாக குடிமகன்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புகார் எழுந்த நிலையில் தற்போதைய வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டது . டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ 10 கூடுதலாக வசூலித்தால் டிஸ்மிஸ் என அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இந்த அறிவிப்பு மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும் விற்பனையாளர்கள் இடையே கலவையை ஏற்படுத்தியுள்ளது .விற்பனையாளர்கள் அவர்கள் தங்கள் தரப்புஆதங்கத்தை தெரிவித்தார் அமைச்சர் உத்தரவை வரவேற்கிறோம் ஆனால் இங்கு நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை களைய அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.? கடை வாடகை ரூ 2500 ஆனால் நாங்கள் ரூ6000 வரை தரவேண்டிய உள்ளது மற்றும் மின் கட்டணம் குறிப்பிட்ட அளவே தருகின்றனர் ஆனால் அதைத் தாண்டியே கட்டனம் வருகிறது அதனையும் நாங்களே செலுத்தி வருகிறோம் . மது பாட்டில் கொண்டு வரும் லோடு மேனுக்கு ரூ 2500 கொடுக்க வேண்டிய இருக்கு இதில் மாமூல் எனப்படும் சமாளிப்பு தொகை காவல் துறை மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் ஆளுங்கட்சி மற்றும் கூட்டனிகட்சி மற்றும் ஒன்றியம் மற்றும் தலைவர்களின் பிறந்தநாள் வசூல் இனி இதனை எவ்வாறு சமாளிப்பது? நாங்கள் குறிப்பிடும் இந்த நடைமுறை பிரச்சினைகள் ஒன்றும் அமைச்சர்ரும் மற்றும் அதிகாரிகளுக்கும் அறியாதது அல்ல. இதை கவனத்தில் கொண்டு இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர். ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment