கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் 32 ரயில் நிலையங்களுடன் கோவையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு உயர்மட்ட பாலம் மூலம் மெட்ரோ திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியுள்ளார். கோவை ரயில் நிலையத்தில் மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைகின்றன கோவை ரயில் நிலையத்தில் இருந்து 2 மெட்ரோ வழித்தடங்களும் துவங்குகின்றன. இத்திட்டத்திற்கா 73 ஏக்கர் நிலம் எடுக்க முடிவு எடுக்கப்பட உள்ளது, இதில் வழித்தடத்துக்காக 35 ஏக்கர் நிலம்மும் பணிமனைக்காக 38 ஏக்கர் நிலம்மும் எடுக்கப்படும் இதில் உயர் மட்ட பாதை உயரம் 13 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை உயரத்தில் அமைய உள்ளது அவினாசி சாலை மற்றும் சக்தி சாலை என 2 வழித்தடங்களில் சுமார் 39 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர் மட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment