கோவை கோவில்பாளையம் அருகே குரும்பம்பாளையத்தில் உள்ள எஸ்எம்எஸ் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்த ஆன் பி வயது 19 வையாபுரி நகரிலுள்ள கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்ட ஆன் பி குளியல் அறைக்கு சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை சந்தேகம் அடைந்த சக மாணவிகள் கதவை தட்டிப் பார்த்தார்கள் திறக்கவில்லை அதனால் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது ஆன் பி வாட்டர் ஹீட்டர் பைப்பில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தார் உடனே கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் மாணவியின் தாய் விமலா ராணி அவரது கணவரை பிரிந்து கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒருவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார் இதன் காரணமாக மாணவிக்கு அவரது தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக இ எஸ் ஐ மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment