கோவை பில்லூர் அத்திக்கடவு மலை கிராம பழங்குடியின மக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆ ராசா எம்பி தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கினார் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 4 July 2023

கோவை பில்லூர் அத்திக்கடவு மலை கிராம பழங்குடியின மக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆ ராசா எம்பி தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கினார்


கோவை பில்லூர் அத்திக்கடவு மலை கிராம பழங்குடியின மக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாமை ஆராசா எம்பி தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இவ்விழாவில் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பழங்குடியின கிராமங்களான அத்திக்கடவு முள்ளி குண்டூர் வீரக்கல் பூச்சிமரத்துர் மாணவர் உள்ளிட்ட 26க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா எம்பி அவர்கள் கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை கூட்டுறவு மற்றும் தாட்கோ மூலம் தனிநபர் கடன் ஊட்டச்சத்து பெட்டகம் என சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கிதாந்திரகுமார் பாடி ஐஏஎஸ் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் இராம சுப்பிரமணியன் ஐ எஃப் எஸ் மாவட்ட வன அலுவலர் திரு ஜெயராஜ் ஐஎஃப்எஸ் சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் சுரேஷ் வருவாய் கோட்டாட்சியர் திரு கோவிந்தன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பார்த்திபன் லட்சுமி பிரியா நிர்மலா தேவி கலைச்செல்வி ராமமூர்த்தி செந்தில் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு



No comments:

Post a Comment

Post Top Ad