சிலிண்டர் விலை உயர்வு வணிகர்கள் அதிர்ச்சி
இந்தியாவில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன இந்த விலை நிர்ணயத்தை பொருத்தவரை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் அதன்படி பெட்ரோல் டீசல் விலைகளை தினசரியும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதம் இருமுறை நிர்ணயிக்கப்படுகிறது ஒவ்வொரு மாதமும் 1 தேதி எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.இந்நிலையில் ஏப்ரல் மாதம் வணிக சிலிண்டர் விலை ரூபாய் 2192.50 ஆக இருந்தது மே மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ 117 குறைந்து வணிக சிலிண்டர் ரூ 2,021 க்கு விற்பனை செய்யப்பட்டது ஜீன் மாதம் ரூ 84.50 குறைக்கப்பட்டது இவ்வாறு இரண்டு மாதங்கள் சிலிண்டர் விலை குறைந்த நிலையில் வணிகர்கள் மற்றும் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளது ஏற்கனவே ரூ 1,937 க்கு விற்ற வணிக சிலிண்டர் இம்மாதம் ரூ 8 உயர்ந்து ரூ 1,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது இதில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை இதனால் ஹோட்டல் மற்றும் சிறு வியாபாரிகள் நடந்தும் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment