கரூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன இதில் குறிப்பாக க.பரமத்தி மற்றும் புகளூர் பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன இதில் சில குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்களை வெட்டி எடுப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகள் முன் வைத்த நிலையில் கரூர் கல்குவாரிகளில் திடீர் ஆய்வை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார் அவர் ஆய்வு செய்த 42குவாரிகளில் 12.
கல்குவாரிகளில் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது விதிமீறப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதமாக ரூ 44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டது இதில் சீரங்கம் தொகுதி எம் எல் ஏ பழனியாண்டி குவாரிக்கு மட்டும் ரூ 23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டது மீதமுள்ள 30 குவாரிகளின் மீது அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு செய்தியாளர் ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment