தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
கோவை மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பெயரில் கோவை மாநகராட்சியில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடப்படும் பணிகள் துவங்கியது.
இன்று கோவை மத்திய மண்டலம் 66 வது வார்டு உட்பட்ட புளியங்குளம் ஹவுசிங் போர்டு அலமேலு மங்கம்மாள் லே-அவுட் ரெட் பீல்ட் சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாய் களுக்கு கருத்துடை மற்றும் வெறினாய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது இதற்காக மாநகராட்சி சார்பில் பிரத்தியோக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment