கோவையில் அரசு பணியாளர்களின் குழந்தைகள் காப்பகம் திறப்பு - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 30 June 2023

கோவையில் அரசு பணியாளர்களின் குழந்தைகள் காப்பகம் திறப்பு


 கோவையில் அரசு பணியாளர்களின் குழந்தைகள் காப்பகம் திறப்பு


தமிழகத்தில் முதன் முறையாக அரசு பணியாளர்களின் குழந்தைகள் கவனிப்பதற்கு குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டது கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கு இக்காப்பகம் திறக்கப்பட்டுள்ளது இக்காப்பகம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார பாடி அவர்கள் துவங்கி வைத்தார் இக்காப்பகத்தில் 4 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஒரு தனியார் ஆசிரியர் குழந்தைகளை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்  இக்காப்பகத்தில் 7  வயதிற்குள் உள்ள குழந்தைகள் மட்டும் இதில் அனுமதிக்கிகப்படுகின்றனர் இங்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி  மற்றும் குழந்தை பாடல்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் குழந்தைகள்  கீழே விழுந்தாலும் அடிப்படாமல்  இருக்க மேட் பொருத்தப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் பெற்றோர் கொடுத்து செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவு மற்றும் சத்து நிறைந்த சிற்றுண்டிகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகம் செயல்படும்  7 வயதிற்குள் உள்ள பள்ளிக்கு செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளை மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad