மூன்று வயது சிறுமி சாதனை - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 June 2023

மூன்று வயது சிறுமி சாதனை

 


மூன்று வயது சிறுமி சாதனை கோவையில்.                விளையாட்டுத்தனமும் சின்ன சின்ன குறும்புகளும் செய்யும் குழந்தைகள் என்னதான் செய்தாலும் சில குழந்தைகள் பெரியவர்களை காட்டிலும் அசாத்திய திறமைகள் மற்றும் ஞாபக சக்திகளை கொண்டு நம்மை அசர வைத்து விடுவார்கள் அந்த வகையில் 3 ரூபிக்ஸ் க்யூப் களை அசால்ட்டாக கையாண்டு அலட்டிக் கொள்ளாமல் டன் என்று கூறி முடிக்கிறார் கோவையை சேர்ந்த 3 வயது சிறுமி அஹான்யா கோவை மணியக்காரன் பழையத்தை சேர்ந்தவர் சோபி ஆனந்தி விஜய் ஆனந்த் தம்பதியினர் இவர்களுக்கு அண்வியா 8 அஹண்யா என்ற மகள்கள் உள்ளனர் அன்வியா சிறுவயதிலிருந்தே ரூபிக்ஸ் கியூபிகளை கையாண்டு வந்துள்ளார் இதை பார்த்த மூன்று வயது சிறுமி அகன்யா அக்கவுண்ட் சேர்ந்து தானும் கலைந்திருக்கும் ரூபிஸ் க்யூப் களை சரி செய்து முயற்சித்துள்ளார் தற்போது 2*2 மற்றும் 3*3 பிரமிட் வடிவிலான ரூபிக்ஸ் கியூர்களை அசாத்தியமாக கையாண்டு வருகிறார் இவரது அசாத்திய திறமையை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது மேலும் தமிழ்நாடு கியூப் அசோசியேசன் சிறுமியை கௌரவப்படுத்தியுள்ளது எது சரி எது தப்பு என்று கேட்டாலே குழம்பி போகும் வயதில் சிறுமி அஹான்யா அசால்டாக ரூபிஸ் க்யூப்புகளை கையாளுவது தங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்று பெற்றோர்கள் கூறினர்.                


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad