பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் வாந்தி மயக்கம்... பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
மாணவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 430 மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதில் இன்று மதியம் 260 மாணவர்கள் பள்ளியில் வழங்கும் சத்துணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் சத்துணவு சாப்பிட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்பை சேர்ந்த 18 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அங்கிருந்து மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இச்சம்பவம் அறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் மாணவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் கெட்டுப்போன பொருட்கள் இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது மேலும் கோட்டூர் போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் சத்துணவு அமைப்பாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment