கோவை கவுண்டம்பாளையத்தில் திருமணம் முடிந்து நான்கு நாட்களில் பெண் மாயம்...
திருப்பூரை சேர்ந்தவர் 46 வயதான ரத்தினசாமி இவரது மகள் 23 வயதான கோமதி யுவர் பிஎஸ்சி விஸ்காம் படித்து வந்தார் 9 /6/2023 அன்று தனது தந்தை ரத்தினசாமியிடம் தனது தோழியின் திருமண நிகழ்ச்சிக்காக செல்வதாக தெரிவித்தார் பின்னர் 11/6/203 அன்று தனது தந்தையிடம் காமநாயக்கன்பாளையத்தில் நாகராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது காவல் நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்...
உடனடியாக ரத்தினசாமி காமநாயக்கன்பாளையத்தில் உள்ள காவல் நிலையம் சென்று இதுகுறித்து விசாரித்தார் அப்போது நாகராஜை திருமணம் செய்து கொண்டதை அறிந்த கோமதியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார் பின்பு ரத்தினசாமி தன் மகளை கணவரோடு அனுப்பி வைத்தார்...
பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 15/6/203 அன்று கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு கோமதி தாய் வீடான திருப்பூருக்கு சென்றார் அங்கே மனவிரக்கத்தில் இருந்த கோமதியை ரத்தினசாமியின் உறவினர் வீட்டிற்கு கோவை கணபதிக்கு அனுப்பி வைத்தார் அங்கிருந்த கோமதி 17 ஆம் தேதி என்று மாயமானார் எங்கே சென்றார் என்பது தெரியாததால் ரத்தினசாமி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment