மேட்டுப்பாளையம் சுபா மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம்...
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் போதிய அளவு ரத்தம் இருப்பு வைப்பதற்காக சுபா மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மற்றும் மகளிர் பங்கேற்றனர் பங்கேற்றவர்களில் மருத்துவ பரிசோதனை செய்ததில் ரத்தக்கொடை தர தகுதியுள்ள 130 மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர் மேட்டுப்பாளையம் மருத்துவமனை நோயாளிகளுக்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்காக அனைத்து வகையான ரத்தமும் 130 யூனிட்டுகள் பெறப்பட்டது ரத்தம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேவைப்படும் அனைவருக்கும் ரத்தம் வழங்கப்படும் இந்த முகாமில் ரத்தம் வழங்கிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சான்றிதழும் சுபா மருத்துவமனையின் சார்பில் புத்தகம் தெய்வம். என்பதோர் தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற புத்தகங்கள் பங்கேற்ற சமூக நல குழுக்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது
மருத்துவர் மகேஸ்வரன் அவர்கள் புத்தகம் வழங்கி தன்னம்பிக்கை ஊட்டினார் மேலும் இந்நிகழ்வில் தோளம்பாளையம் சிறுமுகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர் கூடுதல் சிறப்பு கொண்டது அனைத்து வகையிலும் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment