இளம் பெண் பாலியல் பலாத்காரம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 8 June 2023

இளம் பெண் பாலியல் பலாத்காரம்


கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த இளம் பெண் இவர் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது நான் அன்னூரில் உள்ள தனியார் பத்திர பதிவு எழுத்தாளரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன் பத்திரப்பதிவு தொடர்பாக அன்னூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன் அப்போது அங்கு இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பிரபாகரன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது அவர் அன்னூர் கட்டபொம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை செல்போன் மூலம் இளநிலை உதவியாளர் பிரபாகரன் தொடர்பு கொண்டு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் படியும் கேட்டார் நானும் சாப்பாடு வாங்கிக்கொண்டு சென்றேன் அப்போதே அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் அத்துடன் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் இந்நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றேன் அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உடனே என்னை பலாத்காரம் செய்த இளநிலை உதவி உதவியாளருக்கு தகவல் தெரிவித்தேன் அவர் கருவை கலைத்தால் திருமணம் செய்வதாக கூறினார் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளநிலை உதவியாளர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார் இந்நிலையில் இளம் பெண்ணின் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போது தற்போது அன்னூரில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு கோவையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுவதும் தெரியவந்தது இந்நிலையில் விசாரணை நடத்திய போது பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் தெரிய வந்தது பிரபாகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.    


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad