பொள்ளாச்சியில் ஆட்டுச் சந்தை விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கலை கட்டியது பொள்ளாச்சி ஆட்டு சந்தை சுமார் ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையாக உள்ள பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும் இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது மேலும் வாரந்தோறும் விற்பனையாகும் விலையை விட கூடுதல் விலையில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர் பொள்ளாச்சி ஆட்டுச் சந்தைக்கு உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் திண்டுக்கல் ஈரோடு சேலம் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டது இதில் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனையானது சுமார் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment