பெண் ஓட்டுனர் ஷர்மிளாவை பற்றி அறியப்படாத உண்மைகள்...
கோவை மாவட்டம் VEE VEE தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளாவை பற்றி பேருந்தின் உரிமையாளர் அவரின் மேலாளர் மூலம் தமிழக குரல் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
நாங்கள் தான் பஸ் கொடுத்தோம் தன் திறமையை பாராட்டி நாங்கள் பணியினை கொடுத்தோம் அந்த பணியினை செய்யும் போது தன்னுடைய பிரபலத்திற்காக தனியாக ஒரு சேனலை நடத்தி வந்துள்ளார் இந்நிலையில் இந்த மாதம் மொத்தமாகவே நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்துள்ளார் மேலும் ஷர்மிளா புதிய புதிய வீடியோக்களை வாகனம் இயக்கும்போது தன் நண்பர்களை வைத்து வீடியோ எடுத்துள்ளார் இந்நிலையில் எம் பி கனிமொழி அவர்கள் கோவை வருகையின் போது சர்மிளா சீப் கெஸ்ட் ஆக அழைத்துள்ளார் அதற்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்னரே விடுப்பில் இருந்த நிலையில் அதே பேருந்தில் பெண் கண்டக்டர் பயிற்சியில் இருந்துள்ளார் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வருகையின் போது பேருந்தில் இருந்த பயிற்சி நடத்துநர் பேருந்தின் முன்னிருக்கில் அமர்ந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் முன்பு சென்றுள்ளார் முன் இருக்கையில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பெண் கண்டக்டரும் இந்த பேருந்தில் இருக்கின்றாரா என்று கேட்டுள்ளார் இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இறங்கியவுடன் சர்மிளா பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு கோபத்துடன் எங்கேயோ சென்று விட்டார் பேருந்தில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகவே அதே பேருந்தில் அந்த கம்பெனியின் மற்றொரு டிரைவர் இருந்ததால் பேருந்து இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பேருந்து சென்றடையும் நிறுத்தம் வரை சென்று திரும்பி வரும்போது சர்மிலா அந்த பேருந்தில் ஏறி வந்து தனது மேலாளரிடம் நீங்கள் பெண் கண்டக்டர் வைத்தால் எனக்கு தொந்தரவாக இருக்கும் அதனால் எனக்கு வரும் பேரும் புகழும் கிடைக்காது அவருக்கும் சென்றடையும் என்பதால் பெண் கண்டக்டர் வைக்காமல் இருந்தால் நான் பணிக்கு வருவேன் என்றும் இல்லை என்றால் நான் பணி செய்யப் போவதில்லை என்றும் ஷர்மிளா தான் தன் தந்தையுடன் வந்து என்னிடம் புகார் தெரிவித்தார் மேலும் ஷர்மிளா தன்னை முதல் பெண் ஓட்டுனர் என்று தன்னைத்தானே வீடியோ எடுத்து பிரபலப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
மக்கள் நினைப்பது தவறான கருத்து சர்மிளா தான் முதல் பெண் ஓட்டுனர் இல்லை இதற்கு முன்பே ஆசியாவிலேயே முதல் பெண் அரசு பேருந்தின் ஓட்டுனர் வசந்தகுமாரி என்பவர் தான் இவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம் விருதுகளையும் பெற்றுள்ளார் சர்மிளா முதல் பெண் ஓட்டுனர் இல்லை அவர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காகவும் நடத்திய நாடகம் இது நாங்கள் ஷர்மிளாவை வேலைக்கு வேண்டாம் என்றும் கூறவில்லை தானாகவே லேடி கண்டக்டர் வைத்தால் நான் பேருந்து இயக்க வருவதில்லை என்றும் தங்களுடைய கம்பெனிக்கு வருவதில்லை என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார் என்று தமிழக குரல் பத்திரிக்கையாளரிடம் மேலாளர் ரகு அவர்கள் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment