இரண்டாவது நாளாக நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இங்கு தினசரி சேகரமாகும் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சிறுமுகை சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வரும் நிலையில் இதற்கான பணியாளர்கள் 70 பேர் மற்றும் 131 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை பணியமத்தி வருகிறது இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி செயலாளர் தொல்குடி மைந்தன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஆட்குறைப்பு செய்யக்கூடாது என்றும் உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்களுக்கான கையுறை மண்வெட்டி கடப்பாரை முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள் அப்போது மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் சுகாதார அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் உரிய ஊதியம் வழங்க படும் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனர் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர் இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நான்கு பேரை தனியார் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளது 114 ஒப்பந்த பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment