கோவையில் மாடர்ன் மாமி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த ஹேமலதா என்பவர் உட்பட மூன்று பேரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கோவை விளாங்குறிச்சி சேர்ந்த ஹேமலதா என்பவர் மாடர்ன் மாமி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் ஆடையில் குறித்து மதிப்பீடு செய்வது வீடியோ வெளியிடுவதும் இவர் தனது youtube சேனலில் நடத்தி வந்த நிலையில் தனது சேனலில் ரூபாய் 1200 முதலீடு செய்பவர்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை 300 ரூபாய் சேர்த்து 1500 ரூபாயாக திருப்பித் தரப்படும் என விளம்பரம் செய்திருந்தார். இதனை நம்பி ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்ததாக கூறப்படுகின்றது குறிப்பிட்ட நாளில் அவர்கள் திருப்பி தராததால் காவல்துறையில் அவர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் மொத்தமாக 41 லட்சம் ஏமாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து ஹேமலதா என்பவர் உட்பட மூன்று பேரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment