விதி மீறி உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள்...
பொள்ளாச்சியில் விதியை மீறி வாகனங்கள் உருமாற்றம் செய்யப்படுகிறது சுமார் 1 அரை மீட்டர் நீளம் வரை ஒரு மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுகிறது இதனால் பெரும் அளவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய சந்தையாக உள்ள பொள்ளாச்சியில் சிறப்பு பெற்ற மாட்டு சந்தை உள்ளது செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு மாட்டுச்சந்தை கூடும் இந்நிலையில் மாட்டுச்சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் மாடுகள் ஏற்றி வரப்படுகின்றது
இச்சந்தையில் இருந்து கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது மாடுகளை ஏற்றி வரும் வாகனங்கள் அதிக அளவு உருமாற்றம் செய்யப்பட்டு மாடுகள் ஏற்றப்பட்டு செல்வதால் அதிகளவு விபத்துகளும் நடைபெறுகிறது இது மாதிரியான விதிமுறைகளை மீறி வாகனத்தை மாற்றம் செய்வதால் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என பொதுமக்கள் மத்தியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை வட்டார போக்குவரத்து ஆணையர் அவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment