கணவன் திட்டியதால் மாயமான மகள் மற்றும் மனைவி.
கோவை மாவட்டம் வரதராஜா மில் பகுதியை சேர்ந்தவர் 53 வயதான ராம் பிரகாஷ் இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு வித்யா அம்பிகா 20 வயது மகள் உள்ளார் ராம் பிரகாஷ் பொள்ளாச்சி நவமலை பகுதியில் மின்சார நிலையத்தில் செயற்பொறியாளராக பணியாற்றுகிறார் இதற்காக இவர் பொள்ளாச்சியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து இவரது மனைவி மற்றும் மகள் பொள்ளாச்சி நவமலை சென்று வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பொள்ளாச்சிக்கு வந்த ராஜ லட்சுமி வீட்டை சுத்தம் செய்துள்ளார்.
சரியாக வீடு சுத்தம் செய்யாததால் ராம்பிரகாஷ் திட்டியுள்ளார் மீண்டும் வழக்கம்போல் வீட்டிலிருந்து இவர் வேலைக்கு சென்றுள்ளார் மதியம் தன் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்திருந்தார் ஆனால் அவர் மனைவி அலைபேசியை எடுக்கவில்லை இதனைத் தொடர்ந்து ராம்பிரகாஷ் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி மகள் இருவரும் இல்லாததால் அங்கிருந்து உடனடியாக கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்தார் அங்கும் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன வித்யா அம்பிகா மற்றும் ராஜலட்சுமி இருவரையும் தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment