மோப்பநாய் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் தீவிர தேடுதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றி வந்த பாகுபலி யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது இதை எடுத்து யானையைப் பிடித்து சிகிச்சை அளிக்க நான்கு நாட்களாக வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் பாகுபலி யானையைப் பிடிக்க நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமிலிருந்து வசீம் விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்துவரப்பட்டது.
யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழு தயாராக உள்ள நிலையில் யானை பிடிபட்டவுடன் காயத்தை ஆய்வு செய்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமுக்கு சிகிச்சைக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது காயத்தின் காரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையை தேடுவதற்காக மோப்ப நாய்களையும் இரண்டு கும்கி யானைகளையும் வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment