ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் கைது. கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கோவை ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் 23 வயது பொள்ளாச்சி என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிந்து மேற்படி நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் அடிப்படையில் கலெக்டர் கிரேந்திரகுமார் பாடி அவர்கள் பாலியல் வன்புணர்ச்சி குற்றவாளியான சந்தோஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார் இந்த வருடத்தில் இதுவரை 5 பக்சோ குற்றவாளிகள் உட்பட 21 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment