கோவையில் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் மு பிரதாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது கோவை மாநகராட்சியில் 2000 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமான சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது இதில் சேதம் அடைந்த சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 26 கோடியில் 38 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தில் 19 கோடியே 84 லட்சத்தில் 29 கிலோமீட்டர் தூரத்திற்கும் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இருந்த திட்டம் மாநில நிதி குழு சிறப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களில் மூலம் நகராட்சியில் 260 கோடியில் 563 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதில் 296 இடங்களில் சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட உள்ளது 382 இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது மீதமுள்ள இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் கடந்த 12ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது தற்போது ஒவ்வொரு வாரத்திலும் எத்தனை சாலைகள் உள்ளது அதில் எத்தனை சீரமைக்கப்பட்டவை சீரமைக்கப்பட வேண்டிய சாலைகள் உள்ளிட்டவை குறித்த வரைபடங்கள் ஒவ்வொரு வாரியாக தயார் செய்யப்பட்டு வருகிறது கோவை துடியலூர் கவுண்டம்பாளையம் சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment