சின்னவேடம்பட்டியில் பகல் கொள்ளை. கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் 46 வயதான வடிவேல் இவர் தனியார் கார்ப்பரேட் வங்கியில் மேனேஜராக உள்ளார் இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார் இந்நிலையில் நேற்று காலை வடிவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர் மாலை அவரது மனைவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நான்கு சவரன் நகை மற்றும் சிசிடிவி கேமராவை கொள்ளை நபர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது இது குறித்து வடிவேல் சரவணன் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் பட்டம் பகலில் கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment