இந்தியாவில் முதல் முறையாக கோவையில் கியூஆர் கோடுமூலம் பேருந்தில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்...
தனி வாகனத்தில் பயணிப்பதை விட பேருந்தில் பயணிப்பது மிகவும் செலவு குறைவு ஆகும் ஆனால் டிக்கெட்டுக்கான சில்லறை பிரச்சினை என்பதை பற்றி பல திரைப்படங்களில் நகைச்சுவையாக கூறினார்கள் அதைப்பற்றி அனுபவித்தவர்கள் நிலைமை மிகவும் கவலைக்கிடம் இதற்கு ஒரு தீர்வு காண நினைத்த கோவை தனியார் பஸ் உரிமையாளர் கார்த்திக் பாபு அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தனது தனியார் பஸ்சில் வடவள்ளி ஒட்டிப் புதூர் சாய்பாபா காலனி கீரணத்தம் மதுக்கரை செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கும் தங்களது பேருந்துகளில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை அறிமுகம் செய்தார் இது பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது இனிவரும் காலத்தில் இந்த வசதியை அனைத்து பேருந்துகளிலும் ஏற்படுத்தினால் டிஜிட்டல் இந்தியாவில் பேருந்து சேவை என்ற முதல் சேவையை தொடங்கியது தமிழகம் என்ற பெருமை கோவை கார்த்திக் பாபுவிற்கு கிடைக்கும்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment