கோவை கோவில்பாளையம் காவல் நிலையம் முன்பு வாலிபர் உடல் நசுங்கி இறந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காளியம்பட்டியை சேர்ந்தவர் 28 வயதான கார்த்திக் இவரது மனைவி 22 வயதான நவநீதம் இவர்கள் இருவரும் வேலை தேடி கடந்த பத்தாம் தேதி கோவைக்கு வந்தனர் பின்னர் அன்னூரில் தங்கி உள்ளனர் இந்நிலையில் கார்த்திக்குக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இதனை அடுத்து அவரது மனைவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சிகிச்சை முடிந்து கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர் பின்பு கார்த்திக் கள்ளிப்பாளையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தி உள்ளார் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை திருடி செல்ல முயன்றுள்ளார் இந்நிலையில் இதனைப் பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அப்போது கார்த்திக் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளனர் இந்நிலையில் தண்ணீர் தாகம் எடுப்பதால் தண்ணீர் வாங்க பணம் கொடுக்கும்படி அவரது மனைவியிடம் கேட்டுள்ளார் பின்பு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடைக்கு ரோட்டை கடக்க முயன்றுள்ளார் அந்த வழியாக சென்ற லாரி கார்த்திக் மீது மோதியது கார்த்திக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டார் பின்னர் விபத்தில் சிக்கி இறந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கோவில்பாளையம் போலீஸ் வழக்கு பதிந்து அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment