35 லட்சம் மோசடி செய்த செல்வராணியின் மீது வழக்கு பதிந்து விசாரணை - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 12 June 2023

35 லட்சம் மோசடி செய்த செல்வராணியின் மீது வழக்கு பதிந்து விசாரணை

 


கோவையை அடுத்த சூலூர் காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான தாமரை செல்வி இவருக்கும் சிறுமுகை பகுதியை சேர்ந்த செல்வராணிக்கும் அறிமுகம் ஏற்பட்டு தோழிகளாக பழகி வந்த நிலையில் அப்போது செல்வராணிக்கு அவசரமாக ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது அந்த பணத்தை கொடுத்தால் 30 நாட்களில் 1 அரை லட்சம் திரும்ப தருவதாக கூறியுள்ளார் அதை நம்பிய தாமரைச்செல்வி ஒரு லட்சம் கொடுத்துள்ளார் அந்த பணத்தை வாங்கிய செல்வராணி தான் சொன்னபடி 1.50 லட்சத்தை திரும்ப கொடுத்து விட்டார்.         பின்னர் அவர் பெரிய அளவில் வியாபாரம் செய்வதாக கூறுகின்றார் அதற்கு 20 லட்சம் கொடுத்தால் 10 லட்சம் சேர்த்து தருவதாகவும் கூறியுள்ளார் அதையும் நம்பிய தாமரை செல்வி 20 லட்சத்தை தனது வங்கிக் கணக்கில் இருந்து செல்வராணியின் வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார் மேலும் செல்வராணி 15 லட்சம் கேட்டு உள்ளார் அப்போது தாமரை செல்வி தனது வீட்டை அடமானம் வைத்து 15 லட்சம் வாங்கினார் அதையும் செல்வராணியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் 35 லட்சம் வாங்கியும் பல மாதங்கள் கடந்தன திரும்ப தராமல் இருந்துள்ளார் பலமுறை கேட்டும் செல்வராணியின் பணத்தை திரும்பத் தரவில்லை அதனால் இது குறித்து தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 35 லட்சம் மோசடி செய்த செல்வராணியின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad