கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறப்பு. கோவை மாவட்டம் தடாகம் மற்றும் பெரியநாயக்கன்ப பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி செங்கல் தயாரிக்க மண் தோண்டப்பட்ட சட்டவிரோதமான பள்ளங்கள் உள்ளன வனவிலங்குகள் கனிம வளங்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகள் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அங்கு தோண்டப்பட்ட பள்ளங்களையும் மண்வெட்டி எடுக்கப்பட்ட செம்மண் பள்ளங்களையும் மூடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்ட குழுவில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் தடாகம் சாந்தி மேடு பகுதியை சேர்ந்த 5 பள்ளி சிறுவர்கள் அந்த குழுவில் குதித்து விளையாடினார்கள் பின்னர் நான்கு பேர் வெளியே வந்த நிலையில் வேல்முருகன் என்பவரது மகன் 14 வயது ஹரிஷ் நீரில் இருந்த கட்டை ஒன்றை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது இதில் சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக பத்தடி ஆள நீரில் மூழ்கினான் சக சிறுவர்கள் அங்கிருந்த பெரியவர்களிடம் கூறிய பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஹரிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ.சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment