ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம்
*நாளை 13/05/2023 மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள எஸ் கே சி சாலையில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்திற்கு திராவிட கழக தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கிட தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு சு. முத்துசாமி அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகர திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருச்செல்வம் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக L.ஏழுமலை. கோவை வடக்கு செய்தியாளர் மற்றும் தமிழக குரல் கோவை மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment