கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 4 May 2023

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை...


 கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை கோவை மாவட்டம் காரமடை அருகே கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான பாப்பாத்தி அம்மாள் இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் தற்போது அந்த மூன்று மகன்களும் வேறு வேறு ஊர்களில் இருப்பதால் இவர் கேகே நகர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார் இதனிடையே தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்ற மனவேதனையில் பாப்பாத்தி அம்மாள் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாப்பாத்தி அம்மாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad