மழை வெள்ளத்தில் கார் சிக்கியதால் அவதி கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணாரபாளையம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த ரயில்வே சுரங்கம் அமைக்கப்பட்ட நிலையில் கண்ணார பாளையம் மத்தம் பாளையம் பகுதிகளை கோவை சாலையுடன் இணைக்கும் வகையில் இந்த பாலம் ஆனது கட்டப்பட்டது இந்த ரயில்வே சுரங்கப்பாதை அண்மைக்காலமாக மழை பெய்யும் போது தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிய நிலையில் மழை பெய்யும் போது தண்ணீர் சூழ்ந்து வருவதால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது சுரங்கப்பாதை நான்கடி தண்ணீர் நிரம்பிய நிலையில் அந்த வழியாக செல்லும் வெளியூர் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொள்கின்றன கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் கண்ணாரப்பாளையம் ரயில்வே சுரங்கம் தண்ணீரில் மூழ்கியுள்ளது அந்த வழியாக சென்ற கார்கள் தண்ணீர் மாட்டிக்கொண்டது மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் மேலும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட த துறையினரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment