கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகில் கூடலூர் பகுதியில் அரசு நிலத்தில் கட்டுமானம் ஏற்படுத்த அங்கு இருந்த பலா மரங்களை வெட்டும் பொழுது அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி அதன் அடித்துண்டை செதுக்கி கடத்தி சென்று விட்டதாக நேற்று தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சாரங்கள் அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் மரங்களை வெட்டி கடத்திச் சென்றதாக 53 வயதான திருமலைசாமி 40 வயதான குணசீலன் 33 வயதான சுதாகர் 33 வயதான சரவணன் 28 வயதான ரமேஷ் 43 வயதான கோவிந்தசாமி 30 வயதான இளவரசன் ஆகிய ஏழு நபர்களையும் கடத்திச் சென்ற 4 சந்தன மரக்கட்டைகளையும் கைப்பற்றி குற்ற வழக்கு பதிவு செய்து கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கடத்தலுக்கு துணையாக செயல்பட்ட முதல் இருவருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் விதமும் வெட்டி கடத்தும் பணிக்கு துணையாக இருந்த மற்ற ஐந்து பேருக்கு தலா பத்தாயிரம் விதமும் ஆக மொத்தம் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment