கோவை மாவட்டம் ரங்கராஜன் லே-அவுட் ஆசிரியர் காலனி சிவன் புறம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய ஸ்ரீ ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு ஸ்ரீ பிரகல்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமானது வருகின்ற 05.05.23 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது அன்றைய தினம் மாலை 4 மணியளவில் ஸ்ரீ பிரகல்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் உற்சவருக்கு மகா அபிஷேகமும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாண வைபவமும் அதனைத் தொடர்ந்து மாலை 8 மணி அளவில் அய்யனின் அருள் பிரசாதமான அன்னதானமும் வழங்க இருப்பதால் சுற்றுவட்டார பக்த கோடிகளை வருக வருக என வரவேற்கிறோம்...
மேட்டுப்பாளையம் செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment