27.04.2023, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில், கோவை மாநகர் மாவட்டம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, காந்திபுரம் பகுதி வார்டு 67 அன்னபூர்ணா லே அவுட் பகுதியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ., அவர்கள், வீடு வீடாகச் சென்று, கழக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கி வைத்து, திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் வகையில்
"உடன்பிறப்புக்களாய் இணைவோம்!!"
"தமிழர்களாய் தலைநிமிர்வோம்!"
என்ற பிரசுரங்களை வீடு,வீடாகச் சென்று வழங்கினார்.
இதில் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் வார்டு செயலாளர் மு.ராமநாதன், 67 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கனிமொழி,முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர் மனோஜ், BLA2 கண்ணன், மார்டின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment