கோவை மாவட்டம் துடியலூர் அருகில் உள்ள என் ஜி ஓ காலனி யில் கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் சாலை யோர உணவு தொழில் செய்வோர்களுக்கு நாஸ்வி நிறுவனமும் fssai நிறுவனமும் ஒன்றிணைந்து சாலையோர உணவு தொழில் செய்வோறுக்கு உணவை பாதுகாப்பாகவும் தூய்மையாக வைக்கவும் நாம் அளிக்கும் உணவை எவ்வாறு பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும் அவர்கள் அங்கே வந்த அனைவருக்கும் பயிற்சி அளித்தனர்.
இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் முக கவசம் தலைக்கவசம் சமைக்கும் நேரத்தில் அணியும் உடை கையுறை போன்றவை அனைவருக்கும் அளித்துள்ளனர் இதுபோல அனைவருக்கும் கோவை மாநகராட்சி சாலையோர நல சங்கம் சார்பில் தலைவர் ர கரிகாலன், ந.முருகன் மற்றும் மு.தேவராஜ் அவரது தலைமையில் பயிற்சி பெற்றவர்களுக்கு நீங்கள் உணவு தொழில் செய்பவருக்கு தகுதி யானவர்கள் என சான்றும் மதிய உணவும் அவர்கள் அளித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment