கோயம்புத்தூர் ஆல் இந்தியா என்ட்வைன்ட் ஃபவுண்டேஷன் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர்கள் இணைந்து சுமார் 12345 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கு பெறும் கின்னஸ் உலக சாதனை முயற்சி.
ஆல் இந்தியா என்ட்வைன்ட் ஃபவுண்டேஷன் மூலமாக 555 பரதநாட்டிய நடனப்பள்ளி ஆசிரியர்களைக் இணைத்து பாரத மண்ணே நீ வாழ்க என்ற 6 நிமிட பாடலுக்கு ஒரே நேரத்தில் சுமார் 12345 மாணவர் கலந்துகொண்டு நடனம் செய்யும் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி வரும் மே-7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விளாங்குறிச்சி ரோடு, காளப்பட்டி, கோயம்புத்தூர் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்தும் நேரடியாகவும் இணைய வழி மூலமாகவும் இணையும் அற்புத நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, விருப்பமுள்ளவர்கள் விளம்பரத்தில் உள்ள எண்களில் அழைத்து முன் பதிவு செய்து சாதனையில் இணைந்து கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment