கோவை மாவட்டம் காரமடையில் வார சந்தை நடத்திவரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாசபலஞ்சிவ கல்யாண மண்டபத்தில் ஒன்று திரண்டு காரமடை நகராட்சியில் வாரச்சந்தை நடந்து வரும் இடத்தில் பேருந்து நிலையம் ஆகவும் பேருந்து நிலையத்தை வார சந்தையாகவும் மாற்ற நகராட்சி முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக நகராட்சிக்கு பல கோடிகள் இழப்பீடு வரும் காரணத்தினால் பொதுமக்களும் சந்தை வியாபாரி களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் காரணமாக இன்று காரமடையில் சந்தை முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக இழப்பீடுக்கு ஆளாகிறார்கள் ஆளுங்கட்சியினர் வார சந்தையை பேருந்து நிலையமாகவும் பேருந்து நிலையத்தை வார சந்தையாகவும் மாற்றக்கோரி போராட்டம் நடத்துகிறார்.
எதிர்க்கட்சியினர் வார சந்தையில் மாற்ற வேண்டாம் எனவும் போராட்டம் நடத்துகின்றனர், இதன் காரணமாக காவல்துறை பாதுகாப்பிற்காக காரமடை முழுவதும் அங்கங்க நிறுத்தப்பட்டுள்ளனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment