அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னூர் வட்டம் கரியம்பாளையம், எல்லப்பாளையம், ஆவாரங்குளம் பகுதிகளில் இன்று மரம் நடும் விழாவுடன் கூடிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கே.ஜி. பொறியியல் கல்லூரி (KGISL) மாணவர்கள் பங்கேற்று, ஆவாரங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டதுடன், அப்பகுதி மக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இயற்கை வளங்களை பாதுகாப்பதையும், அதனுடன் தேர்தல் விழிப்புணர்வையும் இணைக்கும் புதுமையான முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது.
இந்த நிகழ்வின் மூலம், பொதுமக்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அன்னூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், அன்னூர் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் குருநாதன், கரியம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அறிவுடைநம்பி, கிராம உதவியாளர் கார்த்திக், கௌசிகா நீர் கரங்கள் பொறுப்பாளர் விஜய் ஆனந்த், சமூக ஆர்வலர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆவாரங்குளம் பராமரிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழக குரல் கோவை மாவட்டச் செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...





No comments:
Post a Comment