100% வாக்குப்பதிவை நோக்கி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு முன்னெடுப்பு - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 4 April 2026

100% வாக்குப்பதிவை நோக்கி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு முன்னெடுப்பு


அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னூர் வட்டம் குன்னத்தூர் கிராமத்தில், மாற்றுத்திறனாளிகள் முன்னெடுத்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

“நாங்கள் வாக்களிக்கிறோம் – நீங்களும் வாருங்கள்; 100% வாக்களிப்போம்” என்ற உறுதிமொழி வாசகத்துடன் நடைபெற்ற இந்த முகாம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், வாக்களிப்பின் அவசியத்தை மாற்றுத்திறனாளிகள் நேரடியாக எடுத்துரைத்தனர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வின் மூலம், ஒவ்வொரு குடிமகனும் தனது வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதையும், வாக்களிக்காமல் இருப்பதற்கு எந்தவித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.


மேலும், இந்த நிகழ்வில் *அன்னூர் தெற்கு வருவாய் ஆய்வாளர், குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர், கரியம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர்* மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை உறுதிப்படுத்தினர்.


மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்த இந்த முயற்சி, 100 சதவீத வாக்குப்பதிவை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.


 தமிழக குரல் கோவை மாவட்ட செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர்  கார்த்திக்...

No comments:

Post a Comment

Post Top Ad