அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு காரமடை பகுதியில் 25 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கற்பகம் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தாயுமானவர் திட்டம், கல்வி, சுய தொழில் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, காரமடை நகராட்சியின் 17ஆம் வார்டு பட்டிக்காரம் பாளையத்தில் வசிக்கும் 25 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா (E-PattA) வழங்கப்பட உள்ளது.
இந்த முயற்சிக்கான ஏற்பாடுகளை காரமடை நகர ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.ஆர். பத்ரி, வார்டு துணை செயலாளர் பூபதி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுபாஷ், மாணவர் அணி துணை அமைப்பாளர் கவின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இந்த அணியோடு இணைந்து, கோவை வடக்கு மாவட்ட மா.மீனவர் அணி அமைப்பாளரும், நகர மன்ற உறுப்பினருமான ராம்குட்டி அவர்களின் தலைமையில் பயனாளிகள் விழாவில் பங்கேற்க புறப்பட்டனர்.
புரட்சியாளர் சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பாதிவாளர் கார்த்திக் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment