டேனிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அயனாவரம் எஜுகேஷனல் டிரஸ், நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் இணைந்து மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி உதகையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக டேனிஷ் அஹமத் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட் துணைத் தலைவர் பி. நாதன் அவர்கள் கலந்துகொண்டு ஏ ஐ தொழில்நுட்பத்தை பற்றி உரையாற்றினார்.
மேலும் டேனிஷ் அஹமத் கல்லூரியின் அட்மிஷன் ஆபிசர் திரு முகமது ஜாஃபர் இண்டஸ்ட்ரியல் 4.0 பற்றி உரையாற்றினார். டேனிஷ் அகமத் கல்லூரியின் அட்மிஷன் கவுன்சிலர் திரு யூஜின் பிராங்கோ கல்லூரி பற்றியும் கல்வியின் மேம்பாட்டை பற்றியும் உரையாற்றினார். முடிவில் தானிஷ் அகமது கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி தில்ஷத் மற்றும் திருமதி ரம்யா நன்றி உரையாற்றினார்கள் . நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அரசு பாலிடெக்னிக் மாணவ மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment