சைபர் செக்யூரிட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது
தானிஷ் அகமது தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் மற்றும் மானுடவியல் துறையின் கீழ் நடைபெற்ற இந்த கருத்துரங்கத்தின் பிரதான நோக்கம் மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு எத்திக்கல் ஹாக்கிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்குவதாக இருந்தது கல்லூரியின் முதல்வர் கே ஜி பார்த்திபன் வரவேற்று பேசினார். கல்லூரியின் இயக்குனர் கே ஏ அக்பர் பாஷா துவக்க உரையை வழங்கி தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை பேசினார் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ அ தமீஸ் அகமது முன்னிலை உரை வழங்கி தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு கருத்துக்கள் தெரிவித்தார் ஆர் பி யு சாம் குமார் கருத்தரங்கின் முக்கியத்துவத்தை விளக்கினார். சென்னை கணினி சங்கத்தின் துணைத் தலைவர் எல் வெங்கடேசன் சைபர் பாதுகாப்பில் தொழில் வழிகாட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார் அவர் சைபர் பாதுகாப்பின் பலன்கள் மற்றும் சவால்களைப் பற்றி விரிவாக பேசினார் மாணவர்களுக்கு எத்திக்கல் ஆக்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுவின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு அளித்தனர் மனித வன மேம்பாட்டு அதிகாரி அரவிந்த் தண்டபாணி கணினி சாப்ட்வேர் வேலைவாய்ப்பு சைபர் பாதுகாப்பின் எதிர்காலம் மற்றும் அதன் தொழில் முறை பங்கு குறித்து உரையாற்றினார் முடிவில் அறிவியல் மற்றும் மானுடவியல் துறையின் தலைவர் ஜே சதீஷ்குமார் நன்றி கூறினார் இந்த கருத்தரங்கத்தில் 200க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கு பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment