மேட்டுப்பாளையத்தில் இன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்து ஐக்கிய ஜமாத் பேரவை அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் சார்பில் போராட்டம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது
இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு
ஐக்கிய ஜமாத் பேரவை ஏ.ஜே. முகமது ஷெரீப். தலைமையிலும்
ஜமாத் உலமா சபை
நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
மனித சங்கிலி போராட்டத்தில் மேட்டுப்பாளையம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து
கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பாலஸ்தீனத்தின் மீது போர் விதிமுறைகளை மீறி குழந்தைகளையும் மருத்துவமனை மீதும்
போர் தொடுத்து வரும் இஸ்ரேலை கண்டித்தும் இதற்கு ஆதரவளித்து வரும் இந்திய பிரதமர் மோடி
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்
உலக நாடுகள் சபை
தலையிட்டு மனித படுகொலைகளை தடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்
இன்று நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு
மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில்
மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் காரமடை காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர்
மேட்டுப்பாளையம் காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வநாயகம்
சிறப்பு பிரிவு காவலர்கள் திருமதி கண்ணன். ரஞ்சித்.
மகேந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
நிகழ்ச்சியின் இறுதியில் காட்டூர் பள்ளிவாசல் ஹஜ்ரத்
இலியாஸ் பாகவி
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்
No comments:
Post a Comment