மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் பயணிகள் பேருந்து இல்லாமலும் இரவு 11 மணி வரை காத்திருந்தனர்... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 21 October 2023

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் பயணிகள் பேருந்து இல்லாமலும் இரவு 11 மணி வரை காத்திருந்தனர்...


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது போதிய பேருந்து வசதி இல்லாததனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் பயணிகள் நேற்று இரவு நேரம் 11.00 மணி வரை வரை பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர் அதிலும் குறிப்பாக மாணவர்களும் மகளிரும் குழந்தைகளுடன் அவதையற்றது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது...



அந்த சமயம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் யாரும் இல்லாததும் அந்த பகுதியில் காவலர்களும் அந்த நேரம் இல்லாததனால்  அப்பொழுது அங்கு வந்த நமது தமிழக குரல் கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ் மற்றும் மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் மற்றும்  குன்னூரைச் சார்ந்த சமூக ஆர்வலரான பிரகாஷ்  அவர்களுடன் சேர்ந்து மக்களை அமைதியான முறையில் பாதுகாப்புடன்  அனுப்பி வைத்தனர் அந்த சமயத்தில் அவர்கள் பயணிகளிடம் படியில் அமர வேண்டாம் பேருந்தில் நின்றபடி செல்ல வேண்டாம் அடுத்த பேருந்தும் வர இருக்கிறது பொறுமையாக செல்லவும் என்று ஒவ்வொரு பேருந்திற்கும் அளவான முறையில் பயணிகளை அனுப்பி வைத்தனர்...



இதைப் பற்றி பொதுமக்கள் கூறும் பொழுது மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் பேருந்து எப்பொழுதும் வரும்பொழுது பேருந்து பயணிகளுடனே வருகிறது பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்ற பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை அவர்கள் எங்கிருந்து ஏறுகின்றார்கள் என தெரியவில்லை ஆனால் உதகை மேட்டுப்பாளையம் பேருந்து வந்து நிற்கும் பொழுது இருக்கைகள் அனைத்திலும் பயணிகள் வருகின்றனர் இது அந்த பேருந்தில் நடத்துனரே இதற்கு காரணம் ஏனெனில் பேருந்து  பேருந்துநிலையத்தில் நின்ற பின்னரே மீண்டும் உதகைக்கு செல்கின்ற பயணிகள் ஏற வேண்டும் ஆனால் வரும்பொழுது பேருந்தில் பயணிகளை ஏற்றி வருகின்றனர் இது அவர்களுக்கு அங்கிருந்து பேருந்து பயணச்சீட்டு வாங்குவதில்லை இதனால் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த பயணிகள் யார் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஏறிய பயணிகள் யார் என்பது தெரிவதில்லை இதுபோன்ற நிலைக்கு முழு காரணமும் அந்த பேருந்தில் நடத்தினார்கள் என குற்றம் சாட்டினர் மேலும் பேருந்து பயணச்சீட்டு சோதகர்கள் இந்த பேருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும்பொழுது அனைவரிடத்திலும் பயணச்சீட்டு இருக்கிறதா என கவனிக்க வேண்டும் இல்லாதவர்களுக்கு அபராத விதிப்பதோடு அந்த பயணிகளை தகுந்த டிக்கெட் இல்லாமல் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து வந்த நடத்துனருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் 



அப்பொழுதுதான உதகை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்ற பயணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் என கூறியிருக்கின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் இனி வருகின்ற நாட்களிலாவது பயணச்சீட்டு சோதனை செய்யும் அதிகாரிகள் தகுந்த இடங்களில் நின்று இதுபோன்று வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை என்று?



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad