வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் விழிப்புணர்வு
வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர் தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றன போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது தலைக்கவசம் அணியாமல் செல்வது அறிவுறுத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் விலக்கப்படுகின்றன இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றன இதனை தடுக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அந்த வகையில் தற்போது வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகள் அதிக அளவில் ஒளிருட்டப்பட்டு கண்கள் கூசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை தடுக்க போலீசார் புதிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இனி அதிக ஒளிருட்டப்படும் முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக அதன்மேல் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர் இதனை முக்கிய சிக்னல்களில் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுகா செய்தியாளர் ல. ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment