இரயில்வே துறை அறிவிப்பு
கோவை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்டு வந்த ரயிலானது வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது அதன்படி கோவை திருப்பதி விரைவு ரயில் (எண் 22616) செவ்வாயக்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10. மணிக்கு புறப்பட்டு அதே நாள்களில் பிற்பகல் 1.20.மணிக்கு திருப்பதியைச் சென்றடையும் திருப்பதி - கோவை ரயில் எண் ( 22615) திங்கள் கிழமை , புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு அதேநாளில் இரவு 10..45. மணிக்கு கோவை வந்தடையும் இந்த ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை , காட்பாடி, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு செய்தியாளர் ஏழுமலை மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment