கோவை மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த நாகசாமி என்பவர் மகன் வெங்கடேஸ்வரன் இவர் அன்னூர் மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள அலாய்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார் வெங்கடேஸ்வரன் கடந்த 5/5/2023 அன்று கம்பெனியை பூட்டிவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலை பார்த்த போது கம்பெனிக்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருடு போனது தெரிந்தது அது சம்பந்தமாக அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் 32 வயதான பூவா லிங்கம் என்பவரை கைது செய்தும் அவரிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 674 காப்பர் இரும்பு பாகங்கள் பறிமுதல் செய்து மேற்படி அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment