குப்பை குளமாக மாறும் கோவை வீரபாண்டி பிரிவு பிரதான சாலை... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 27 March 2023

குப்பை குளமாக மாறும் கோவை வீரபாண்டி பிரிவு பிரதான சாலை...

 



கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அ‌தனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பெரியநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் இந்த குப்பைகளை அந்தப் பகுதியின் அனைத்து குப்பைகளையும் பிரதான சாலையிலே கொட்டி செல்கின்றனர் இதற்கு அருகாமையில் உணவகங்கள் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையம் போன்ற மக்களுக்கு அத்தியாவசியமான அனைத்தும் உள்ள இடங்களில்   இந்த குப்பைகளை கொட்டுவதால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




 தற்பொழுது  இது போன்ற குப்பைகளால் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே பிரதான சாலையில் இந்த குப்பைகளை கொட்டுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம் இது போன்ற பிரதான சாலைகளில் இந்த குப்பைகளை கொட்டாமல் தடுக்குமா நகராட்சி நிர்வாகம் என்று இதைப்பற்றி பொதுமக்களிடம் கேட்கும் பொழுது இந்த பகுதி கூடலூர் நகராட்சிக்கு சேர்ந்தது எனவும் கூடலூர் நகராட்சி சார்பில் வரும் வாகனங்கள் மூலமாகவே இந்த குப்பைகள் கொட்டப்படுவதாகவும் இந்த குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்த குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.


 அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பிரதான சாலைகளிலேயே ஒரு நகராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை கொட்டலாமா என கேள்வியும் எழுப்பினர் பொறுத்திருந்து பார்ப்போம் ஒரு விடிவு காலம் வருமா என்று மேலும் அவர்கள் கூறும் பொழுது இந்த குப்பைகள் இதே இடத்தில் கடந்த ஆறு மாத காலமாக கொட்டப்பட்டு வருவதாகவும் இதைப்பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூடலூர் நகராட்சி மேல் சரமரியாக குற்றங்களை கூறியுள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம் இந்த குப்பைகள் அகற்றப்படும் இந்த பகுதி மக்களுக்கு விடிவு காலம் வருமா என்று.... 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோயம்புத்தூர் மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad