கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் தாலுகா வீரபாண்டி பிரிவு ஜோதிபுரத்தில் எம்ஜிஆரின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜெஅருண்குமார் ஏற்பாட்டில் அதிமுக ஒன்றிய செயலாளர் கேவிஎன் ஜெயராமன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும், உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீரபாண்டி பிரிவு அருகாமையில் உள்ள ஜோதிபுரத்த்தில் தண்டு மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
மேலும் எம்ஜிஆர் இன் திருவருட்சிலையை அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைத்து மலர் தூவி அவர்கள் நினைவு தினத்தை அனுசரித்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment