கோவை பவர் ஹவுஸ் பகுதியில் மின்வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 3 சதவீத அகவிலைப்படியை ஜுலை 1 முதல் நிலுவையுடன் உடனே வழங்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விதவை, விவாகரத்து மற்றும் ஊனமுற்றோர் குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கவும் வலியுறுத்தினர்.
மேலும், தேர்தல் வாக்குறுதியின் 70 வயது ஆன ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் உயர்த்தி வழங்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தினர். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்திடவும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment